Home சினிமா கோலிவுட் இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்!

259
0
Cinematographer Kannan Died

Cinematographer Kannan Died; இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் காலமானார்! இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கண்ணன் இன்று பிறபகல் 2 மணியளவில் காலமானார்.

ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

இயக்குநர் பீம்சிங்கின் மகன் ஒளிப்பதிவாளர் கண்ணன். இவர், தனது தந்தை பீம்சிங் இயக்கத்தில் வந்த ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வந்த நிழல்கள் படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.

அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, புதுமைப் பெண், முதல் மரியாதை, ஒரு கைதியின் டைரி, கடலோர கவிதைகள், வேதம் புதிதி, கொடி பறக்குது, சொல்ல துடிக்குது மனசு, சூரசம்ஹாரம், என் உயிர் தோழன், கிழக்கு சீமையிலே, லூட்டி,

சேனாதிபதி, பசும்பொன், நாடோடி தென்றல், கருத்தம்மா, பிரியங்கா, ஆயுள் ரேகை, பொம்மலாட்டம், உழியின் ஓசை, கடல் பூக்கள், கேப்டன் மகள், கண்களால் கைது செய் என்று ஏராளமான தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இதில், பெரும்பாலும் பாரதிராஜா இயக்கத்தில் வந்த படங்கள். ஆதலால், பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கண்ணன் கருதப்பட்டார்.

தமிழைத் தவிர, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், அது பலனளிக்கவில்லை என்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 69. கண்ணனுக்கு லெனின் என்ற ஒரு சகோதரரும், காஞ்சனா என்ற மனைவியும் இருக்கின்றனர்.

மேலும், ஜனனி, மதுமதி ஆகிய இரு மகள்கள் இருக்கின்றனர். ஜனனி ஐடி துறையில் பணியாற்றும் தினேஷ் ஜெயபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தியாரா என்ற ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை ஜூன் 14 ஆம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுத்த சூரி!
Next articleநீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் சரக்கு பாட்டிகள் பறிமுதல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here