சீனாவின் முதல் முறையாக கொரோனா வைரசை கண்டுபிடித்து எச்சரித்த மருத்துவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசு.
கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தில் முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
ஜனவரி 14ஆம் தேதி வரை கொரோனா வைரஸை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சீன அரசு.
இது ஆரம்ப காலத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் ஓரளவு தடுத்து இருக்கலாம்.
வுகானில் உள்ள 34 வயது கண் மருத்துவரான டாக்டர் லி வென்லியாங் மத்திய மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
சார்ஸ் போன்ற நோய்கள் பரவுவதை பற்றி எச்சரிக்கை விடுக்க முயன்றார். ஆனால் வதந்திகளை பரப்புவதாக சீன அரசு அவரைத் தண்டித்தது.
கொரோனா வைரஸ் நிவாரண முயற்சிகளுக்கு உதவும்போது டாக்டர் லீ அதே நோயால் இறந்து போனார்.
சீன அரசு பின்னர் சுதாரித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்து வந்தது.
கொரோனா வைரஸ் சீனாவில் பரவிய காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 3500 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
தற்போது அந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல உயிர்களைக் கொன்று அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சீன அரசு இந்த நோயை முதன்முதலில் கண்டுபிடித்து எச்சரித்த டாக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
முதன்முதலில் இந்த நோயை கண்டு பிடித்த மருத்துவரை அரசு பாராட்டாமல் தண்டித்தது. அந்த நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த டாக்டரை ஹீரோ போல் அந்த நாட்டு மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சீன அரசு தற்போது தங்களது தவறை உணர்ந்து அந்த டாக்டரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
வுகான் போலீசார் கொடுத்த அறிக்கையில் டாக்டர் லீ தான் எங்களுக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பற்றி சொன்னவர்.
ஆனால் நாங்கள் அவர் பேச்சைக் கேட்காமல் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்தது தவறு. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.
அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டு இருக்கும் பட்சத்தில் நாங்கள் இந்த வைரஸை தடுத்திருக்க முடியும்.
இதனால் பலர் பலியாகி இருக்க மாட்டார்கள் ஆனால் எங்களால் முடியாமல் போனது.
மக்களுக்காக உயிர் நீத்த டாக்டர் லீ வென்யோங்கிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறோம் என்று சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாம் சில நல்லவர்களை உதாசீன படுத்தும்போது அதற்கு நாம் பல உயிர்களை கொடுக்க வேண்டியதாயிற்று. இனியாவது சீன அரசு திருந்த வேண்டும்