Home வரலாறு ஸ்மித், வார்னர், பேன் கிராஃப்ட் ஐசிசி தடை இன்று

ஸ்மித், வார்னர், பேன் கிராஃப்ட் ஐசிசி தடை இன்று

429
0

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஸ்மித் வார்னர் பேன் கிராஃப்ட் மூவரும் பால் டம்பெரிங் செய்த நாள் இன்று

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

டர்பன் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

இரண்டாவது டெஸ்ட்

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

கேப்டவுன் நகரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது.

டீன் எல்கர் சதம்

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுப்லஸ்ஸிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டீன் எல்கர் 141 ரன்களும், டிவிலியர்ஸ் 64 ரண்களின் துணையுடன் தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 311 ரன்கள் எடுத்தது.

முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது.

ரபாடா மோர்க்ள் அசத்தல்

அந்த அணியில் அதிகபட்சமாக ஃபேன் கிராப்ட் 77 ரன்கள், நாதன் லயன் 47 ரன்கள் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா மற்றும் மோர்னி மோர்க்கல் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பிலாண்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சர்ச்சையில் சிக்கிய மூவர்

56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மார்ச் 24ஆம் நாள் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

இந்த மைதானத்தில் பந்து திரும்பாத போது ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் அருமையாக பந்து வீசினார்கள்.

அப்போது பதிவு செய்த தொலைக்காட்சியில் வேலை பார்ப்பவர்கள் சந்தேகித்து சில வீடியோக்களை மீண்டும் பார்க்க தொடங்கினார்கள்.

அங்குதான் சில விஷயங்கள் அவர்களின் பார்வைக்கு தென்பட்டது. ஆம் ஸ்மித், வார்னர், பேன் கிராப்ட் மூவரும் சேர்ந்து பந்தை கிரிஸ்டலால் சேதப்படுத்தியது, அதாவது பால் டம்பெரிங் செய்தது தெரியவந்தது.

அடுத்த கணமே அதை டிவியில் மேலும் மேலும் ஒளிபரப்ப, மைதானத்துக்கு வெளியிலிருந்து ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் மற்றொரு வீரர் டீம் பைனேவிடம் வாக்கி டாக்கியில் அங்கு என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையெல்லாம் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று இந்த தவறு செய்தவர்கள் ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

மற்ற விரல்கள் கவனத்தை திசை திருப்பி பேன் கிராப்ட் வந்த இடத்தில் கிரிஸ்டலால் சேதப்படுத்தி மீண்டும் கிரிஸ்டலை தான் உள்ளாடைக்குள் மறைக்கும் போது வீடியோவில் மாட்டிக்கொண்டார்.

தவறை ஒப்புக் கொண்ட மூவர்

அன்றைய நாள் முடிந்தது பிரஸ் கான்ஃபரன்ஸ் நடந்தது. அதில் ஸ்மித், வார்னர், பேன் கிராஃப்ட் மூவரும் தங்கள் தவறை ஒப்புக் கொண்டனர்.

அடுத்த நாள் அந்த டெஸ்ட் தொடர்ந்தது ஆனால் இரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 373 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆஸ்திரேலியா அணிக்கு 430 ரன்கள் இலக்காக வைத்தனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி மனம் நொந்து விளையாடினார்கள்.

தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா

நான்காவது நாள் முடிவில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் தென் ஆப்பிரிக்க அணியிடம் 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்கள்.

இரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணியின் மோர்னி மோர்க்கல் 5 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார். இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

பால் டம்பரின் சர்ச்சை

பின்பு இந்த பால் டம்பெரிங் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. கைதிகளைப் போல வார்னர், ஸ்மித், பேன் கிராஃப்ட் மூவரையும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

தடைசெய்த ஐசிசி

விசாரணையில் அவர்கள் செய்த தவறு உறுதி செய்யப்பட்டது.இதற்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் முதலில் திட்டம் தீட்டியும் இதற்கு பேங்க் கிராப்ட் செய்ய வற்புறுத்தப்பட்டது.

தெரியவந்தது ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்தது ஐசிசி.

அவர்களுக்கு துணை போன பேன் கிராப்ட்க்கு ஒன்பது மாதங்கள் மட்டுமே தடைவிதித்தது.

ஸ்டீவ் ஸ்மித்திடம் கேப்டன் பறித்து பதவி டிம் பைனே கொடுத்தனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு இது மிகப் பெரிய கருப்பு நாளாக அமைந்தது.

அந்த நாட்டு பிரதமர் இது நம் நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு என்று குறிப்பிட்டிருந்தார்.

வார்னர், ஸ்மித்தும் தடை நீங்கி மீண்டும் அணியில் இடம்பிடித்து விஸ்வரூபம் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here