மருத்துமனையில் கொரோனா உள்ளது எனக் கூறியதை நம்பாமல் பெங்களூரு முதல் டெல்லி வரை சென்று 2000 பேருக்கு கொரோனவை பரப்பி உள்ளார் பெங்களூர் பெண்.
கூகுளில் வேலை செய்த நபருக்கு டெல்லியைச் சேர்ந்த பெண்ணுடன் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. ஹனிமூனுக்கு பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
மார்ச் 7-ம் தேதி இந்திய திரும்பிய கணவர் 9-ம் தேதி பெங்களூர் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்று உள்ளார்.
வேலைக்கு சேர்ந்த பின்பு தான் அவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
உடனே அவருடைய மனைவியையும் சோதனை செய்துள்ளனர். அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Master audio launch live update: விஜய் விழா மேடைக்கு வந்துவிட்டார் – Photos https://t.co/cquqJxQmhV@actorvijay @Dir_Lokesh #ThalapathySpeech #MasterUpdate #MasterTrackList #MasterAudioLaunch #Thalapathy65
— Mr Puyal (@MrPuyal) March 15, 2020
நம்பாத பெண்
பதற்றத்தில் அந்தப்பெண் அவருடைய பெற்றோருக்கு போன் செய்ய, மருத்துவர்கள் பொய் சொல்கிறார்கள் நீ டெல்லி கிளம்பி வந்துவிடு என பெற்றோர் கூறியுள்ளனர்.
அந்த படித்த பெண் பெற்றோரின் முட்டாள் தனமான யோசனையைக் கேட்டு பெங்களூருவில் இருந்து ட்ரைன் வழியாக மும்பை சென்று உள்ளார்.
அங்கு இருந்து விமான நிலையத்திற்கு காரில் சென்று உள்ளார். மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று உள்ளார்.
அங்கு வீட்டில் பதுங்கி கொண்டு உள்ளார். அதிகாரிகள் அவரின் வீட்டை கண்டு பிடித்து பெற்றோரிடம் கேட்ட போது அவர் இங்கு வரவே இல்லை என்று கூறியுள்ளனர்.
பிறகு காவல்துறையினர் வந்து சோதனை நடத்தியதில் வீட்டிற்குள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து அவர் டெல்லி பயணம் மேற்கொண்டது வரை கிட்டத்தட்ட 2000 பேருக்கு மேற்பட்ட மக்களை சந்தித்திருக்க கூடும்.
இதில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது எனப் புரியாமல் அதிகாரிகள் குழம்பிவிட்டனர். இப்படி நான்கு பேர் இந்தியாவில் இருந்தால் நாலே நாளில் இந்தியா சுடுகாடாக மாறிவிடும்.