Home சினிமா கோலிவுட் கவலைப் படாதே சகோதரா, அடிச்சு தூக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்!

கவலைப் படாதே சகோதரா, அடிச்சு தூக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்!

436
0
Coronavirus Song

Coronavirus Song : Adichi thookku awareness song

Coronavirus Song | அடிச்சு தூக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு: வைரலாகும் மாணவிகளின் பாடல்! பள்ளி மாணவிகள் பாடும் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் தாக்கம் ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஈரான், குவைத், காங்காங், ஆகிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

எனினும், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் (Coronavirus Song) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் பாடியுள்ளனர்.

அந்தப் பாடல் அஜித் நடித்த படங்களில் இருக்கும் பாடல்களை தழுவியே வந்துள்ளது.

கடந்த ஆண்டு வந்த விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சு தூக்கு பாடலையும், கவலைப்படாதே சகோதரா என்ற காதல் கோட்டை படத்தின் பாடலையும் வைத்து கொரோனா வைரஸ் பாடல் பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலைப் பாடிய பள்ளி மாணவிகளுக்கு அஜித் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலின் இறுதியில் கில்லி படத்தில் வரும் அப்படி போடு போடு என்ற பாடலுக்கும் மாணவிகள் மெட்டு எடுத்து பாடியுள்ளனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா பயத்தால் வரும் மன அழுத்தம் கவலையிலிருந்து விடுபடுவது எப்படி?
Next articleவசந்த காலத்தை வரவேற்கும் கூகிள் டூடுல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here