ஜகமே தந்திரம் எப்போது ரிலீஸ் தெரியுமா? தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜகமே தந்திரம் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
ஜகமே தந்திரம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டரில், ஜகம் சுகம் அடைந்த பிறகு படம் திரைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.