Home சினிமா கோலிவுட் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம்: தனுஷ் படக்குழு!

அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம்: தனுஷ் படக்குழு!

325
0
Dhanush Jagame Thandhiram

Dhanush; அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம்: தனுஷ் படக்குழு! அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம் என்று தனுஷ் படக்குழு அறிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்களும் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த வாரம் கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாக இருந்தது. அனைத்து படங்களுமே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

அதற்குள்ளாகவே நிறுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து தனுஷின் ஜகமே தந்திரம் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, COVID19 வைரஸால் ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோயால், YNot Studios, நிறுவனத்தின் நிலைமை மேம்படும் வரை அனைத்து படங்களுக்கான நிர்வாக, போஸ்ட் புரோடக்‌ஷன், விளம்பர பணிகளை நிறுத்தி வைக்கிறது.

அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஒருவர் திடீர் மயக்கம் அடைய என்ன காரணம்?
Next article18/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here