Home சினிமா கோலிவுட் சியானின் துருவ நட்சத்திரம் என்னாச்சு? கௌதம் மேனன் வெளியிட்ட புதிய அப்டேட்!

சியானின் துருவ நட்சத்திரம் என்னாச்சு? கௌதம் மேனன் வெளியிட்ட புதிய அப்டேட்!

269
0
Dhruva Natchathiram Update

Dhruva Natchathiram; சியானின் துருவ நட்சத்திரம் என்னாச்சு? கௌதம் மேனன் வெளியிட்ட புதிய அப்டேட்! சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

துருவ நட்சத்திரம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் துருவ நட்சத்திரம். கடந்த 2016 ஆம் ஆண்டு இப்படத்தின் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டது.

மேலும், 7 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் காரணமாக படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆனது.

கௌதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் படத்தில், சியானுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாக முதலில் விக்ரமுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவருக்குப் பதிலாக ரித்து வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இன்னும் முடியாத நிலையில், ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்து அந்த படங்கள் அனைத்துமே வெளியாகிவிட்டது. இந்த நிலையில், தற்போது கோப்ரா படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், விக்ரமின் அடுத்த படம் குறித்து அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

அந்த வகையில், சியான்60 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு போல. ஆம், இப்படம் குறித்து அறிவிப்பை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றும், விரைவில், விக்ரம் இப்படத்திற்கான டப்பிங் பணிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளையும் கௌதம் மேனன் படமாக்க இருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here