அன்று திமுக.. இன்று பாஜக.. அதே துணிவு, அதே கம்பீரம் – அஜித் ரியல் ஹீரோ
அஜித் எதற்காக மௌனமானாரோ, அதே அரசியலால் நேற்று மௌனம் கலைத்துள்ளார். அன்று கலைஞர்.. இன்று தமிழிசை…
அஜித் யாருக்கும் அடங்காத காட்டுக்குதிரை. அவருடைய வழியில் போகவிடும் வரை மட்டுமே அவர் சாது. தடுக்க நினைத்தால் அடங்கா குதிரையாக மாறிவிடுவார்.
அன்று பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆட்சியில் இருந்தது திமுக. கட்டாயப்படுத்தியே வந்துள்ளேன் என்று அஜித் கலைஞர் முன்னிலையிலேயே மேடையில் கர்ஜித்தார்.
இப்படி ஒரு துணிச்சலை அன்று தான் தமிழகம் பார்த்தது. இப்படி ஒரு தில்லான நடிகர் கூட உண்டோ? என அஜித்தை அண்ணாந்து பார்த்தனர்.
நான் மானதிற்குள் மென்று முழுங்கியதை அஜித் தில்லாக கூறிவிட்டார் என்கிற தொனியில் இருந்தது ரஜினியின் கைதட்டல்.
அந்த சம்பவத்திற்கு பிறகு அஜித் முற்றிலுமாக பத்திரிக்கைகள், மீடியாக்கள், ரசிகர்கள் என எவரையுமே சந்திப்பதில்லை.
எந்த ஒரு விஷயம் என்றாலும் அஜித் வாய் திறப்பதே இல்லை. இன்று அவரின் மௌனம் கலைத்த பெருமை பாஜகவையே சேரும்.
அஜித் எதுக்குமே வாய் திறப்பதில்லை என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித் கையப்பமிட்ட கடிதத்தை, அவருடைய பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா வெளியிட்டார்.
அஜித்திடம் இன்னும் அதே கம்பீரம், அதே துணிவு அந்த லெட்டரில் தென்பட்டது. “சிவனேன்னு போறவனை சொறிஞ்சு விட்ட கதையாகிவிட்டது” தமிழிசையின் நிலைமை.