புனித ரமலான் நோன்பு (ramadan 2020) இருப்பவர்கள் எதை எல்லாம் பின்பற்ற வேண்டும்? எதை எல்லாாம் செய்ய கூடாது? ரமலான் நமக்கு உணர்த்தும் நற்பண்புகள் என்ன?
ரமலான் நோன்பில் செய்ய வேண்டியவை & செய்ய கூடாதவை
புனிதமிகு ரமலானில் நாமெல்லாம் அதிகமான நன்மைகளை பெற வேண்டும் என்றால் அதன் நோன்புகளின் மூலமாக, இரவுகளில் நின்று தொழுவதின் மூலமாக, குர்ஆனின் மூலமாக, சுன்னத்தான (ஆதாரப்பூர்வமான) இபாதத்கள் (வணக்க வழிபாடுகள்) அதிகமதிகம் செய்ய வேண்டும்.
எண்ணங்களின் அடிப்படையில் தான் செயல்கள் அமைகின்றன
புனித ரமலானில் நாம் நமது குறிக்கோளை அடைய வேண்டுமென்றால் ஊக்கமும் வைராக்கியமும் வேண்டும். நன்மையை அடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மிக அவசியம்.
ரமலானின் சிறப்புகளையும் அதன் மகத்துவத்தையும் நாம் மீண்டும் மீண்டும் படித்து அறிந்துகொள்ள வேண்டும். நாம் செய்திடும் அமல்களின் மூலமாக தக்வாவவை (இறையச்சத்தை) நம்முள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனோடு தோழமை கொள்ள வேண்டும்
இந்த புனிதமான மாதத்தில் அதிகமான நேரத்தை குர்ஆனுடன் செலவிட வேண்டும். அல்லாஹ் குர்ஆன் மூலமாக என்ன கூறுகிறான் என்பதை சிந்திக்க வேண்டும்.
குர்ஆனின் தமிழகத்தை தினமும் படித்து அதை உணர்ந்து அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம்மோடு பேசுகிறான்; அவன் எனக்கு வழி காட்டுகிறான் என்கிற உணர்வுடன் குர்ஆனை அணுகவேண்டும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள்) நோன்பு என்பது குற்றங்களை விட்டும் உங்களை காக்கும் கேடயமாகும்; ஆகவே நீங்கள் அதனைக் விடயமாகவே பயன்படுத்துங்கள்.
நோன்பாளி கெட்ட வார்த்தை மற்றும் ஆபாசமான வார்த்தைகளைப் பேசக்கூடாது. நோன்பு வைத்திருப்பவரை மற்றவர் திட்டினாலோ அல்லது சண்டைக்கு வந்தாலோ, “நான் நோன்பு வைத்திருக்கின்றேன்; இது போன்ற விஷயங்களை செய்ய மாட்டேன்” என்று கூறி பொறுமையுடன் விலகிவிட வேண்டும்.
மேலும் நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டும் கிடையாது, கண்களுக்கும், காதுகளுக்கும், நாவுக்கும் , கை கால்களுக்கும் அது நோன்பாகும்.
அல்லாஹ்வுக்கு பிடிக்காத விஷயங்களில் அவன் தடை செய்திருக்கின்ற விஷயங்களின் கண்களால் பார்க்கக் கூடாது பேசக்கூடாது.
எந்த விஷயத்தில் ஏதாவது சறுக்கி விட்டால் உடனேயே பாவமன்னிப்பு தேட வேண்டும். தொழுகையில் கவனமாக இருப்பதுடன், சகோதரர்களை புன்னகையுடன் வரவேற்பதும், மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருப்பதும் எல்லா வகையிலும் மற்றவர்களுக்கு உதவுவது பெரும் நன்மையை பெற்றுத் தருகின்ற நற்செயல்கள் ஆகும்.
தஹஜ்ஜுத் என்னும் இரவுத்தொழுகை
நீங்கள் தஹஜ்ஜத் தொழும் பழக்கத்தை மேற்கொண்டால் அதில் உங்களுக்கு தனி இன்பம் கிடைத்துவிடும்.
ஒவ்வொரு இரவின் மூன்றாம் பகுதியிலும் அல்லாஹ் வானத்திற்கு வருகிறான். அந்நேரத்தில் அல்லாஹ்வோடு தனித்திருந்து பாவமன்னிப்பு தேட வேண்டும்.
ரமலான் மாதத்தோடும், குர்ஆனுடன் நாம் நடந்து கொள்கின்ற முறையைப் பற்றி நாளை அல்லாஹ்விடத்தில் குற்றச்சாட்டு வைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் குர்ஆனை பின்பற்றும் மக்களாக நாம் மாற வேண்டும்; அதற்காக உழைக்க வேண்டும்; அல்லாஹ் உதவி புரிவானாக!