அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை என்று ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதில் அளித்துள்ளார்
கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் சமூகவலைத்தளத்தில்
“கொரோனா பேரிடரை போர்க்கால அடிப்படையில் சந்திக்க, ஆளுங்கட்சி – எதிர்கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும்!
இப்பேரிடரை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள, தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருக்குமெனில், “வீடியோ கான்பரன்ஸ்” மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யலாம்”.
இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வரையும் டாக் செய்திருந்தார்
இந்நிலையில் முக ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார்
“எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது.
நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை”.
அன்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.