Home Latest News Tamil கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் காட்டில் யானை இறந்த நிலையில் காணப்பட்டது: கோவை

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் காட்டில் யானை இறந்த நிலையில் காணப்பட்டது: கோவை

யானை இறந்த நிலையில்

கோவை: வியாழக்கிழமை காலையில் கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கண்டியூர் காட்டில் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது.

18 முதல் 20 வயது மதிப்புடைய பெண்யானை

விளை நிலத்திற்கு அருகில் 18 முதல் 20 வயது மதிப்புடைய பெண்யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது. இதை அடுத்து உழவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

காதில் காயங்கள்

இறந்த யானையில் இடது காதில் காயங்கள் இருந்தது ஆனால் இறந்தற்கான சரியான காரணம் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவு

கோவை மாவட்ட வன அலுவலகர் டி. வெங்கடேஷ் மற்றும் வனத்துறை விலங்குகள் நல மருத்துவர் டாக்டர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த ஆண்டு மட்டும் 13 யானைகள் இறந்துள்ளன

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 13 யானைகள் இறந்த நிலையில் கோவை மாவட்ட காட்டு பகுதிகளில் காணப்பட்டுள்ளன.

Previous articleசாத்தான்குளம், காவல் துறை கட்டுப்பாட்டில் தந்தை – மகன் இறப்பு சம்பவம், துணை ஆய்வாளர் உட்பட காவலர்கள் மீது சிபி-சிஐடி வழக்கு
Next articleஅப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here