பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 10% பங்குகளை வாங்க முடிவு செய்தது ஏன் தெரியுமா? ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தில் 45 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் பேஸ்புக்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பேர் போன பேஸ்புக் நிறுவனம் இந்தியா தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
ஜியோமார்ட் என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் வாட்ஸ்ஆஃப் பயனாளர்களையும் இணைத்து இந்தியாவில் ஒரு புதிய முயற்சி செய்ய பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்ஆஃப் தளத்தில் இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். அதிலும் டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம்.
இதன் மூலம் அந்நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக பேஸ்புக் மாறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.