கூகுள் க்ரோம் ப்ரவ்சர் உருவாகி பத்து வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. பத்தாவது பிறந்தநாளை முன்னிட்டு பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
கூகுள் க்ரோம் இதுவரை 69 வெர்சன்களை வெளியிட்டுள்ளது. புதிதாக வெளிவந்துள்ள ப்ரவ்சரில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன எனப் பார்க்கலாம்.
கடவுச்சொல் உருவாக்கி (Password Generator):
ஏதேனும் ஒரு இணையதளத்தில் லாக்இன் செய்யும்போது அந்த கடவுச்சொல்லை சேமிக்கவா எனக்கேட்கும். நாம் அடிக்கடி லாக்இன் செய்யும்போது மறக்கமாட்டோம்.
ஒருவேளை எப்போதாவது பயன்படுத்தும் இணையதளங்களின் கடவுச்சொல்லை மறக்காமலிருக்க இவ்வசதி உதவும். இவ்வசதியுடன் கூடுதலாக பாஸ்வேர்ட் ஜெனரேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் புதியதாக சைன்இன் செய்யும்போது, நீங்கள் சேமித்துள்ள பாஸ்வேர்டுகளை உங்களுக்கு நினைவூட்டும். சேமித்துள்ள பாஸ்வேர்டுகளைப்போன்று உருவாக்க அறிவுறுத்தும்.
ஸ்மார்ட் ஆன்சர் (Smart Answer):
நீங்கள் கூகுள் சர்ச் பாரில் ஏதாவது டைப் செய்யும்போது, நீங்கள் தேடமுயன்ற வார்த்தை உடனே தோன்றிவிடும். இது பழைய வசதி. தற்பொழுது வார்த்தையை டைப் செய்யும்போதே, அதற்கான விடையை கீழே காட்டிவிடும்.
வானிலை அறிக்கை, திரைப்படத்தை பற்றிய தகவல், படத்தின் டியுரேசன் என நீங்கள் சர்ச் செய்தால், புதிய பக்கத்திற்குச் செல்லாமல் சர்ச்பாரிலேயே காட்டிவிடும்.
எழுத்துப்பிழை நீக்கும் வசதி:
தமிழ்மொழி உட்பட பல மொழிகளின் எழுத்துப்பிழைகளை நீக்கும் வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. ஏதாவது தவறாக டைப் செய்தால் அதை சிவப்புக் கோடிட்டுக்காட்டும். ஆனால், இவ்வசதி இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
சரியான வார்த்தைகளையும் தவறு எனக்காட்டும். அப்படி காட்டினால், அதை ரைட் கிளிக் செய்து டிக்சனரியில் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம். மீண்டும் அவ்வார்த்தையை டைப் செய்தால் சரியானதாக எடுத்துக்கொள்ளும்.