தமிழக மீனவர்களின் படகுகள் திருப்பி ஒப்படைக்கப்படும் என கோத்தபய ராஜபக்சே இந்தியப் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது பலலட்சம் தமிழர்களை கொன்றுகுவிக்க உறுதுணையாக இருந்தவர் என அப்போது கோத்தபயவின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் கோத்தபய, இலங்கை அதிபராக பதவியேற்றவுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து விரட்டப்பட்டனர்.
இதனால் மீண்டும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என பெரும்பாலானோர் கருத்துக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கோத்தபய ராஜபக்சே இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து ராணுவ மரியாதை செய்யப்பட்டது.
இதன்பின்பு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் நடந்த சந்திப்பில், தமிழக மீனவர்களின் படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என கோத்தபாய, மோடிக்கு உறுதியளித்துள்ளார்.
இலங்கையுடன் நட்பு தொடர்வதால் இந்தியாவின் பலமும், இந்தியப் பெருங்கடலின் பலமும் அதிகரிக்கும் என மோடி தெரிவித்துள்ளார்.