Home சினிமா கோலிவுட் ஃப்ரெண்ட்ஷிப் படப்பிடிப்பில் ஹர்பஜன் சிங்!

ஃப்ரெண்ட்ஷிப் படப்பிடிப்பில் ஹர்பஜன் சிங்!

356
0
Friendship Shooting Spot

Harbhajan Singh; ஹர்பஜன் சிங், அர்ஜூன் ஆகியோர் இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் (Friendship) புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தொடர்ந்து தமிழில் டுவீட் பதிவிட்டு வருகிறார்.

இவ்வளவு ஏன், இதுவரை ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்கும் (Harbhajan Singh) நடிக்கிறார்.

இதையடுத்து, வெப் சீரிஸ் ஒன்றில் ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பதாகவும், அதில், திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு திருவள்ளுவர் கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh). ஆம், ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா இயக்கித் தயாரிக்கும் புதிய படம் ஃப்ரெண்ட்ஷிப்.

ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் லோஸ்லியா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் லோஸ்லியா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் கவின் லோஸ்லியா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஆனால், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அப்படியெல்லாம் எதுவும் இல்லாத மாதிரி இருவரும் காட்டிக்கொண்டனர்.

எனினும், தற்போது ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்து வருகிறார். ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதில், அர்ஜூன், ஹர்பஜன் சிங் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleMalaysia airlines MH 370 விமானம் மறக்க முடியுமா? வரலாற்றில் இன்று
Next articleகொரோனா அப்டேட்; கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here