முன்னாள் காதலி மற்றும் காதலை மறப்பது எப்படி? காதல் தோல்வி-யில் இருந்து விடுபடுவது எப்படி? காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள் படிக்கவும்..
சமூக வலைதளங்கள் வந்தபின், காதலர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. காதலிக்க ஏதுவாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகள் உள்ளன.
அதேநேரம் காதல் தோல்வி அடைந்தபின், அதை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதும் இந்த சமூக வலைதளங்களே!
முன்னாள் காதலியை மறக்க நினைத்தாலும், சமூக வலைத்தளம் மூலம் கண் முன்னே வந்து நிற்பாள். காதலியால் கழற்றி விடப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?
எடுத்துக்காட்டாக, வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட்சீன் செக் செய்வது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அப்டேட் உள்ளதா? எனப்பார்ப்பது போன்ற செயல்களே!
ஒருவேளை நீண்ட நேரம் வாட்ஸ்ஆப்பில் இருந்தால் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என அவளை நினைத்து நினைத்து வேதனையடைவது.
முன்னாள் காதலி மற்றும் காதல் தோல்வியில் இருந்து எப்படி மீள்வது?
சமூக வலைதளங்களில் உங்கள் காதலியின் ஐடியை ப்ளாக் செய்துவிடுங்கள். பெண்கள், காதலனுடைய ஐடியை ப்ளாக் செய்துவிடுங்கள்.
முடிந்தால், சிலநாட்களுக்கு சமூகவலைதளப் பக்கமே வரவேண்டாம். உங்களுடைய மொபைல் என்னை முடிந்தால் மாற்றிவிடுங்கள்.
உங்களுடைய எக்ஸின் புகைப்படம், செல்பி, அந்தரங்கப் படங்கள் இருந்தால் அதை அழித்துவிடுங்கள்.
அதைவைத்து அவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம். அச்செயல் உங்களுடைய வாழ்க்கையையும் சீரழிக்க வாய்ப்பு உள்ளது.
அவளைவிட்டு பிரிந்து விட்டதை, எல்லோருக்கும் தெரியும்படி அறிவித்துவிடுங்கள். அதாவது, நீங்கள் காதலித்தது யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்களுக்கு…
இதனால் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் உங்கள் எக்ஸ்யைப் பற்றி நினைவூட்டுவது தவிர்க்கப்படும்.
இவை அனைத்தையும் செய்தும் உங்களால் பழைய நியாபகங்களில் இருந்து மீளமுடியவில்லையா?
காதலை மறப்பது எப்படி?
புதிய நபர்களிடம் பேசுங்கள். புதிய காதலைக்கூட தேடிக்கொள்ளுங்கள். ஆனால் முடிந்தவரை காதலில் மீண்டும் விழாமல் இருப்பதே சிறந்தது.
ஒருவரை மறக்க இன்னொருவருடன் பேசி பழகுவது, பழைய காதலில் இருந்து எளிதில் வெளிவர உதவும். அதேவேளை, புதிய நபருடன் ஒரு எல்லை வைத்துப் பழகுங்கள்.
தனிமையில் அமர்ந்து புத்தகம் படியுங்கள். இது உங்கள் சிந்தனையைச் சிதறவிடாமல் இருக்க உதவும்.
உங்களுக்கு எதில் விரும்பம் அதிகமோ, அதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். செக்ஸ்-யை தவிர. அது, மீண்டும் உங்கள் எக்ஸ்-யை நினைவுபடுத்த வாய்ப்புள்ளது.
மீம்ஸ்களை அதிக அளவில் பாருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் விளையாடுங்கள்.
அறைக்குள் முடங்குவதைத் தவிருங்கள். பூட்டிய அறைக்குள் இருப்பது உங்களின் மன நிம்மதியைக் கெடுக்கும். மனநோயாளியாகக் கூட மாற்றிவிடும்.