Sars Virus : தற்போதைய கொரோனவினைப்போலவே இதே நூற்றாண்டில் மக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தினை ஏற்படுத்தியதுதான் சார்ஸ் வைரஸ்.
சீனாவில் குவாங்டோங் எனும் மனதில் 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறியப்பதுதான் சார்ஸ் வைரஸ். இது வௌவாலின் மூலம் மனிதருக்கு பரவியிருக்கலாம் என்று கூறினாலும், எதன்மூலம் இது பரவியது என்று இன்றுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை.
உலகம் முழுக்க 28 நாடுகளுக்கு பரவி 8000 பேரை பாதித்தது மட்டுமல்லாமல், 750க்கும் மேற்பட்டோரை பலியாகியுள்ளது இந்த சார்ஸ் வைரஸ் ( Sars virus ).
இந்த வைரஸ் கண்டறியப்பட்டவுடன் இதன் பரவலை கட்டுப்படுத்த, தற்போது போடப்பட்டிருக்கும் லாக்டவுன் போலவே 2002இல் போடப்பட்டது.
கொரோனவைரஸ் குடும்பத்தையே சார்த்த இந்த வைரஸின் அறிகுறிகளும் காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் சுவாசப்பிரச்சனை.
இதுவரை இந்த வைரஸ்சிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் ஆரம்பத்தில் வேகமாக கூடிய பலி எண்ணிக்கை நாளடைவில் குறையத்தொடங்கியது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் நோய் எதிர்ப்புசக்தியினை அதிகரிக்கவே மருந்துகள் தந்ததாகவும், இயற்கையில் மக்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி வேகமாக உண்டானதால் பலர் குணமடைந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த உலகில் மந்தை எதிர்ப்புசத்தி என்று ஒன்று உள்ளது. ஒரு பகுதியின் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டால் அங்கிருக்கும் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு அந்த நோயினை எதிர்க்கும் சக்தி உருவாகிவிட்டால் அதன்பின் அந்த நோய் அந்த பகுதியினை தாக்கும் வலிமையினை இழந்துவிடுமாம்.
சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட இடங்களில் வேகமாக அதிகரித்த மந்தை எதிர்ப்புசக்தி காரணமாகவே வேகமாக இதன் தாக்கத்திலிருந்து பல நாடுகள் மீண்டதாக சொல்லப்படுகிறது.
2004ஆம் ஆண்டிற்கு பிறகு உலகில் எங்கேயும் இந்த வைரஸ் தொற்றினால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.