Home சினிமா கோலிவுட் 9 PM 9 Minutes: நம்பிக்கை ஒளி போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்!

9 PM 9 Minutes: நம்பிக்கை ஒளி போராட்டத்தில் கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்!

299
0
9 PM 9 Minutes

9 PM 9 Minutes: விளக்கு ஏற்றிய சினிமா பிரபலங்கள்! கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நம்பிக்கை போராட்டத்தில் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், சாதாரண ஜனங்கள் வரை அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த நம்பிக்கை போராட்டத்தில் சினிமா பிரபலங்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, மஞ்சிமா மோகன், நாகர்ஜூன், அமலா, சவுந்தர்யா ரஜினிகாந்த், ஆர்த்தி, பார்த்திபன் ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து நம்பிக்கை போராட்டம் நடத்தினர்.

உலகத்தையே நடு நடுங்க வைத்தது கொரோனா வைரஸ். இந்தியாவில் மட்டும் 83 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும், 3219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஒரு புறம் ஏற்பட்டுள்ளது.

ஒரு புறம் இத்தனை நாட்கள் எப்படியோ வீட்டிற்குள்ளேயே இருந்து தாக்குப்பிடித்துவிட்டோம் என்று பெருமைப்படும் நிலையும் வந்துவிட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக எத்தனையோ பேரது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் வேலை இழந்துள்ளனர்.

அவ்வவ்போது கொரோனா பாப்பு குறித்து, சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் என்று பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் (9 Minutes 9 PM) வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் ஆப் செய்துவிட்டு, மெழுதுவர்த்தி, விளக்கு ஏற்றுதல், செல்போன் டார்ச், டார்ச்லைட் ஒளிரச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளுக்கு இணங்க சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாமானிய மக்கள் என்று நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக நம்பிக்கை என்னும் ஒளியை ஏற்றி வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

தீபாவளி பண்டிகையைப் போன்று, கார்த்திகை தீபத் திருநாள் போன்று தங்களது வீடுகளில் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி பிரபலங்கள் நம்பிக்கை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டு மெழுகுவர்த்தி என்னும் நம்பிக்கையை ஒளியை ஏற்றினார்.

அவரைப் போன்று அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்தும் விளக்கு ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நயன்தாரா தனது வீட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைத்தார். காமெடி நடிகை ஆர்த்தி தனது கணவருடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி நம்பிக்கை ஒளியை ஒளிரச் செய்தார்.

மேலும், பின்னணி பாடகி சித்ரா, நடிகை மஞ்சிமா மோகன், பார்த்திபன், வில்லன் நடிகர் ராகுல் தேவ், நாகர்ஜூன், அமலா, பார்வதி நாயர், அமிதாப் பச்சன், அனில் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, சுனில் குரோவர், ஷ்ரேயா கோஷல், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அக்‌ஷய் குமார், வாணி கபூர், நேகா ஷர்மா, இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் விளக்கு ஏற்றி வைத்து 9 மணி 9 நிமிடம் நம்பிக்கை ஒளி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக #9மணி9நிமிடம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. அதோடு, #9MinutesForIndia, #LightsOfHope, என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.

SOURCER SIVAKUMAR
Previous articleஆசிஷ் நெஹ்ரா கருத்து; இந்த இளம் வீரர் தோனியை நியாபக படுத்துகிறார்
Next articleயுவராஜ் மனசு தோனிக்கு இல்லையே..! அள்ளிக்கொடுத்த சிக்சர் மன்னன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here