INDvsNZ 2nd Test: இந்தியா vs நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்க்ஸ் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது.
இந்தியா vs நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியாவை நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
INDvsNZ 2nd Test
நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பிரித்தி ஷா, புஜாரா, ஹனுமன் விஹாரி மூவரும் அரைச்சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து விக்கெட் சரிவு
அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி முதல்நாள் இறுதியில் நிதானமாக ஆடினாலும் இரண்டாவது நாள் முதலே விக்கெட்டுகள் சரிவு தொடங்கியது. 177 ரன்கள் 8 விக்கெட்டை இழந்தது.
அடுத்து வந்த ஜேமிசன் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடினார். ஜேமிசன் துணையுடன் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் ஜெனிஸ்டன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நெயில் வாக்னர்க்கு அற்புதமான ஒரு கேட்ச் பிடித்தார் ஜடேஜா.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதான் 60 ரன்கள். டாம் பெளண்டல் 30 ரன்கள், கிராண்ட் ஹோம் 26 ரன்கள், வாக்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இந்தியா அபார பந்துவீச்சு
இந்திய தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கமே விக்கெட் சரிந்தது.
பிரித்வி ஷா 14, மயங்க் அகர்வால் 3, புஜாரா 24 விராட் கோலி 14, ரகானே 9, நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய உமேஷ் யாதவ் ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஹனுமன் விகாரி 5 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்
இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 16 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி முதல் இன்னிங்சில் எப்படி விக்கெட் விழுந்ததோ ஒருசில விக்கெட்டுகளை தவிர மற்ற விக்கெட்டுகள் அப்படியே இரண்டாவது இன்னிங்சிலும் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது.
இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெறும் சதவீதம் குறைவே. ஆனால் ஆச்சரியம் நடக்குமா என்று நாளைய ஆட்டத்தில் பார்ப்போம்.