Home சினிமா கோலிவுட் ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை நன்றாக தான் உள்ளது; அவரின் மகன்

ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை நன்றாக தான் உள்ளது; அவரின் மகன்

நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளைக் கொண்ட ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது மகன் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னோட அப்பா நன்றாகத்தான் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

264
0
ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை

ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை நன்றாக தான் உள்ளது; அவரின் மகன், ஆர் சுந்தரராஜனின் தமிழ் சினிமா பங்களிப்பு, ரஜினி-சுந்தரராஜன் சர்ச்சை.

நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளைக் கொண்ட ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை குறித்து தகவல் வெளிவந்தது.

இதை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது மகன் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னோட அப்பா நன்றாகத்தான் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

ஆர் சுந்தரராஜனின் தமிழ் சினிமா பங்களிப்பு 

அன்று சிந்திய இரத்தம், அம்மன் கோயில் கிழக்காலே, ராஜாதிராஜா, எங்கிட்ட மோதாதே, சுயம்வரம் என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் ஆர்.சுந்தரராஜன்.

இதே போன்று நட்புக்காக, குசேலன், பெரிய இடத்து மாப்பிள்ளை, சூர்யவம்சம், மே மாதம், மேகத்துக்கும் தாகம் உண்டு, ராசாமகன், பரதன், எல்லாமே என் ராசா தான் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஆர்.சுந்தரராஜன் அண்மையில் ரஜினிகாந்த் குறித்து தவறான கருத்துக்களை பொதுவெளியில் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் ரஜினிகாந்த் ரசிகர்கள், ஆர்.சுந்தரராஜன் இறந்துவிட்டதாக தகவல் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் அவரது மகன் சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ரஜினி-சுந்தரராஜன் சர்ச்சை

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது அவர் கட்சி தொடங்கி முதல் கூட்டத்தை கோவையிலும் 2 ஆவது கூட்டத்தை திருப்பூரிலும் நடத்துவார்.

ஆனால், அதற்குள் அவர் இறந்துவிடுவார். அந்தளவிற்குத்தான் அவரது உடல்நிலையும் இருக்கிறது என்று பொதுவெளியில் பேசக்கூடாத வார்த்தையை பேசி ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், தான் ஆர்.சுந்தரராஜன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது மகன், அசோக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், எனது அப்பா நன்றாகத்தான் இருக்கிறார். சென்னையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

அப்போது சுந்தரராஜனும், அவரது மகனும் காரில் சென்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகமே எதிர்க்கும் பிரச்சனைகளுக்கு நேர் எதிரான கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வருகிறார். மேலும், சிஏஏவுக்கு எதிராக தற்போது மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளார்.

அதோடு, டெல்லி வன்முறையையும் வன்மையாக கண்டித்து குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதோடு, வரும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleINDvsNZ 2nd Test: இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்
Next articleMookuthi Amman Posters; போஸ்டரில் தெய்வீகமாக காட்சியளிக்கும் நயன்தாரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here