Home சினிமா கோலிவுட் Mookuthi Amman Posters; போஸ்டரில் தெய்வீகமாக காட்சியளிக்கும் நயன்தாரா

Mookuthi Amman Posters; போஸ்டரில் தெய்வீகமாக காட்சியளிக்கும் நயன்தாரா

346
0
Mookuthi Amman Posters

Mookuthi Amman Posters; போஸ்டரில் தெய்வீகமாக காட்சியளிக்கும் நயன்தாரா நயன்தாராவின் ஒரு முகம், மூக்குத்தி அம்மன் இரண்டாவது லுக் போஸ்டர்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குநர் அவதாரம் எடுத்தப் படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா முன்னணி ரோலில் நடிக்கிறார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த நிறுவனம் கோமாளி, எல்கேஜி, தேவி 2, பப்பி உள்பட பல படங்களை தயாரித்துள்ளது.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகை நயன்தாரா தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியு விஜயுடன் இணைந்து நடித்த தர்பார், பிகில் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மூக்குத்தி அம்மன்

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.பக்தி படம் என்பதால், இந்தப் படத்திற்காக விரதமும் இருந்துள்ளார். அதே சமயத்தில், அசைவ உணவுகளையும் தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்புக்கு முன்பாக, கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் டிரெண்ட்

மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், Mookuthi Amman Posters என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதையடுத்து, படத்தின் 2 ஆவது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

நயன்தாராவின் ஒரு முகம்

மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தார தலையில் கிரீடம் வைத்திருப்பது போன்றும், மூக்குத்தி அணிந்திருப்பது போன்றும், அம்மனுகு பிடித்த நிறமான மஞ்சள், பச்சை நிறங்களில் சேலை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. அதோடு, நயன்தாராவின் இடதுபுறம் முகம் மட்டும் தெரியும் படி போஸ்டரில் புகைப்படம் அமைந்துள்ளது.

மூக்குத்தி அம்மன் 2 ஆவது லுக் போஸ்டர்

இதையடுத்து, வெளியான 2 ஆவது லுக் போஸ்டரில் நயன்தாரா தனது வலது கையில் சூலாயுதத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுவரை நயன்தாரா த்ரில்லர் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, மீனா, ரோஜா, கேஆர் விஜயா, பானுப்ரியா என்று மாஸ் நடிகைகள் பலரும் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் உருவாக்கப்பட்ட பக்தி படங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட பல நடிகைகள் சக்தி, பார்வதி போன்று அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை நன்றாக தான் உள்ளது; அவரின் மகன்
Next articleRaghava Lawrence: திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்: அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதியுதவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here