Home சினிமா கோலிவுட் Mookuthi Amman First Look: இன்று இரவு வெளியீடு

Mookuthi Amman First Look: இன்று இரவு வெளியீடு

386
0
Mookuthi Amman First Look

MMookuthi Amman First Look: மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதா?நயன்தாரா மூக்குத்தி அம்மன், Mookuthi Amman First Look.

அரசியலைப் பற்றி காமெடி திரைப்படத்தில் நடைத்து சினிமா துறையில் நல்ல வரவேற்பை பெற்று பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்த ஆர்‌ஜெ பாலாஜி.

ஆர்‌ஜெ பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆகவும் யாஷிகா ஆனந்த் மற்றும் கௌதம் கார்த்தி சிறப்பு அப்பெயரேன்ஸில் நடிக்கிறார்கள்.

மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருக்கும் நிலையில், நயன்தாரா சாமி வேடத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

நயன்தாரா மூக்குத்தி அம்மன்

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரத்தில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதில், நயன்தாராவிற்கு அப்படி ஒன்றும் கதாபாத்திரம் அமையவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரதம் இருந்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா விரதம் இருந்துள்ளார். மேலும், அவர் அசைவ உணவுகளையும் சாப்பிடவில்லையாம். முழுக்க முழுக்க தன்னை படத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக அவர் அதிகளவில் சம்பளமும் வாங்கியுள்ளாராம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Mookuthi Amman First Look

இன்று இரவு மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று முதல் டுவிட்டரில் #MookuthiAmman என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleTechofes 2020 Awards: அட்லி சிறந்த இயக்குநர்
Next articleRJ பாலாஜி உணர்ச்சிகர பேச்சு; Techofes 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here