ஐபிஎல் ஏலம் 2020-ம் ஆண்டிற்கான போட்டிகளுக்கு கொல்கத்தாவில் இன்று ஏலம் நடக்க உள்ளது. இதில் 2 கோடி வீரர்கள் பட்டியல், 1.5 கோடி வீரர்கள் பட்டியல் என ஆரம்பவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் எந்த வீரர் அதிக விலை கொடுத்து வாங்க உள்ளனர் என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
ஐபிஎல் அணிகளின் பட்ஜெட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தேவையான வீரர்கள்: ஐந்து (2 வெளிநாடு, 3 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 70.40 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 14.60 கோடி. இந்த தொகையை வைத்துக்கொண்டு ஐந்து வீரர்களை சென்னை அணி ஏலம் எடுக்க வேண்டும்.
டெல்லி கேப்பிடல் அணி
தேவையான வீரர்கள்: 11 (5 வெளிநாடு, 6 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 57.15 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 27.85 கோடி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
தேவையான வீரர்கள்: 9 (4 வெளிநாடு, 5 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 42.30 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 42.70 கோடி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தேவையான வீரர்கள்: 11 (4 வெளிநாடு, 7 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 49.35 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 35.65 கோடி.
மும்பை இந்தியன்ஸ்
தேவையான வீரர்கள்: 7 (2 வெளிநாடு, 5 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 71.95 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 13.05 கோடி.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தேவையான வீரர்கள்: 11 (4 வெளிநாடு, 7 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 56.10 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 28.90 கோடி.
ராயல் சேலஞ்சர் பெங்களூரு
தேவையான வீரர்கள்: 12 (6 வெளிநாடு, 6 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 57.10 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 27.90 கோடி.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
தேவையான வீரர்கள்: 7 (2 வெளிநாடு, 5 உள்நாடு). இதுவரை செலவு செய்த தொகை 68 கோடிகள்.
மீதம் உள்ள தொகை 17 கோடி.