Home விளையாட்டு 10 கோடியா? 15கோடியா? வாயடைக்கவைத்த மேக்ஸ்வெல்-கும்மின்ஸ்

10 கோடியா? 15கோடியா? வாயடைக்கவைத்த மேக்ஸ்வெல்-கும்மின்ஸ்

377
0
10 கோடியா மேக்ஸ்வெல் கும்மின்ஸ்

10 கோடியா? வாயடைக்கவைத்த மேக்ஸ்வெல். 15.50 கோடிக்கு ஏலம்போன கும்மின்ஸ்.! IPL 2020 Auction.

கடந்த ஆண்டு மேக்ஸ்வெல்லை 9 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி. ஆனால் இந்த வருமோ மேக்ஸ்வெல்லுக்கு மேலும் கிராக்கி எகிறிப்போனது.

மேக்ஸ்வெல் ஆரம்ப விலை 2 கோடி. ஏலம் கேட்கப்பட்ட உடனேயே அவரின் விலை படிப்படியாக உயர்ந்தது.

இந்த வருடத்தில் 10 கோடிக்கு மேல் விலைபோன முதல் ஏல வீரர் என்ற பெருமையையும் மேக்ஸ்வெல் தட்டிச்சென்றார்.

10.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இது சற்று அதிகம் என்றே பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஆஸ்திரேலிய அணி வீரர் பாட் கும்மின்ஸ் 15.50 கோடி விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார்.

ஏலத்திற்கு வராதவர்கள் பட்டியலில் விராட் 17 கோடி, தோனி 15 கோடி, ரிஷப் பண்ட் 15 கோடி, ரோஹித் சர்மா 15 கோடி என அணியில் தக்கவைக்கப்பட்டனர்.

தற்பொழுது ஏலத்தில் 15.50 கோடிக்கு கும்மின்ஸ் எடுக்கப்பட்டதால், விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். கிறிஸ் மோரிசும் 10 கோடி பட்டியலில் இணைத்துள்ளார்.

சாம் கர்ரன்னை 5.50 கோடிக்கும், பியுஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர்களான யூசுப் பதான், பின்னி, மோஹித் சர்மா ஆகியோர் இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here