Home சினிமா கோலிவுட் வெப் சீரிஸாக வரும் வட சென்னை 2: இயக்குநர் வெற்றிமாறன்!

வெப் சீரிஸாக வரும் வட சென்னை 2: இயக்குநர் வெற்றிமாறன்!

301
0
Vada Chennai 2

Vada Chennai; வெப் சீரிஸாக வரும் வட சென்னை 2: இயக்குநர் வெற்றிமாறன்! வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் வெப் சீரிஸாக வெளியாக வாய்ப்பிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வட சென்னை 2 வெப் சீரிஸ் ஆக வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் வட சென்னை. வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணியில் அசுரன் படம் திரைக்கு வந்தது. இப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதையடுத்து, அண்மையில், ஒரு நேர்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன் கூறுகையில், வட சென்னை 2 படம் உருவாக இன்னும் சில காலம் பிடிக்கும்.

மேலும், வட சென்னை 2 ஆம் பாகத்தை வெப் சீரிஸ் ஆக எடுத்து வெளியிடவும் திட்டம் இருக்கிறது. இது குறித்து இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleரஷ்ய அதிபர் புதினுக்கு, வடகொரிய அதிபர் கிம் வாழ்த்து மடல்
Next article10/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here