Home சினிமா கோலிவுட் லோஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு: 1yearoflosliyaism டிரெண்டிங்!

லோஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு: 1yearoflosliyaism டிரெண்டிங்!

258
0
Losliya Mariyanesan

Losliya; லோஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு: 1yearoflosliyaism டிரெண்டிங்! லோஸ்லியா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டதை ரசிகர்கள் 1yearoflosliyaism என்ற ஹேஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

லோஸ்லியா தமிழகத்திற்கு வந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லோஸ்லியா. இவர், கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஓவியாவைப் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான லோஸ்லியாவிற்கு தனியாக ஆர்மியும் உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், நடிகர் கவினை காதலித்தார். ஆனால், வெளியேறிய பிறகு எதுவுமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கிறார்.

நேற்று கவின் தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது, #1yearoflosliyaism  எஎன்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லோஸ்லியா பிரண்ட்ஷிப் மற்றும் மற்றொரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து லோஸ்லியாவின் மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கவர்ந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், லோஸ்லியாவிற்கு ஏற்றே பல பாடல்களை கவின் மற்றும் சாண்டி இருவரும் இணைந்து பாடினர். அப்போது அந்தப் பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஜூன் 23 ஆம் தேதி லோஸ்லியா இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. இதன் காரணமாக, #1yearoflosliyaism என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleதல அஜித்தின் வலிமை திரையரங்கிலா? ஓடிடி தளத்திலா? போனி கபூர் விளக்கம்!
Next articleபிரபல டிக்-டாக் நட்சத்திரம் “இரவுடி பேபி சூர்யா” தற்கொலை முயற்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here