Home சினிமா கோலிவுட் போராடி தோற்பதற்கு இது ஒன்றும் கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்!

போராடி தோற்பதற்கு இது ஒன்றும் கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்!

352
0
Jyothika Ponmagal Vandhal Trailer

Ponmagal Vandhal Trailer; போராடி தோற்பதற்கு இது ஒன்றும் கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்! ஜோதிகா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு 96 படத்தின் புகழ் கோவிந்தா வசந்தா இசையமைத்துள்ளார்.

கொரொனா லாக்டவுன் காரணமாக பொன்மகள் வந்தாள் படம் திரையரங்குகள் வெளியாகவில்லை. மாறாக, ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் இந்தப் படத்தை தங்களது தளத்தில் வெளியிடுகிறது. வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மே மாதம் ஊட்டியில் 5 குழந்தைகளை கடத்தி கொலை செய்யப்பட்ட ஜோதியின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த கொலையை யார் செய்தது? அதன் பின்னணி என்ன? என்பதை வைத்து தான் இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த டிரைலரில் பாக்யராஜ், பிரதாப் போத்தன், ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாக்யராஜ் தான் அந்த குழந்தைகளை கடத்தி கொலை செய்திருக்கிறார் என்று அவர் மீது பழி சுமத்தப்படுகிறது. இதற்காக அவரும் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுகிறார்.

அவர் நிராபராதி என்று ஜோதிகாவும், இல்லை இல்லை அவர் தான் குற்றவாளி என்று பார்த்திபனும் நீதிமன்றத்தில் வாதாடுகின்றனர்.

இந்த உலகம் முழுவதும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பல பேரிடம் உண்மையைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்காது என்று கூறுவதோடு இந்த டிரைலரும் முடிகிறது.

தல அஜித் பாணியில் தனி ஒரு மனுஷியாக நீதிமன்றத்தில் நியாயத்திற்காக போராடும் ஜோதிகாவிற்கு இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleமன்மத ராசா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயா சிங்: வைரலாகும் வீடியோ!
Next articleகொஞ்சம்‌ கொரோனா நெறைய காதல் குறும்படம்: நன்றி தெரிவித்து சாந்தனு அறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here