Home சினிமா கோலிவுட் நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

391
0
Karnan Title Look

Karnan Title Look; நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு! தனுஷின் 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது,

கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

கர்ணன் படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, லால் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கர்ணன் என்றால் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன் என்று குறிப்பிட்டு ஹேப்பி பர்த்டே தனுஷ் சார் என்று வாழ்த்தியுள்ளார். அதோடு, மாலை 5.55 மணிக்கு ராஜ மேளம் பீட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால், கர்ணன் லிரிக் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதோடு, இன்று தொலைக்காட்சிகளில் தனுஷ் நடித்த படங்கள் அதிகளவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே!
Next articleமதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here