Home சினிமா கோலிவுட் டிஜிட்டலில் நரகாசூரனா? கார்த்திக் நரேன் திடீர் முடிவு?

டிஜிட்டலில் நரகாசூரனா? கார்த்திக் நரேன் திடீர் முடிவு?

306
0
Naragasooran Digital Releaes

Naragasooran Digital Release; கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனது நரகாசூரன் படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட இயக்குநர் கார்த்திக் நரேன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 2ஆவது படமான நரகாசூரன் படத்தை தொடங்குவதாக டுவிட்டரில் அறிவித்தார்.

இதையடுத்து, செப்டம்பர் 16 ஆம் தேதி புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டு 41 நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சுந்தீப் கிஷான், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நரகாசூரன் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.

இப்படத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட கார்த்திக் நரேனின் மாஃபியா சேப்டர் 1 கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு.

மாஃபியா படத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மாஃபியா படத்தின் 2 ஆம் பாகமும் உருவாக இருக்கிறது.

இந்த நிலையில், உலகமே அச்சத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 30க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு திரையரங்குகள் திறக்கப்படும்.

அப்போது எந்த படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் புதிய சிக்கல் ஏற்படும். ஏற்கனவே சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல காரணங்களால் தனது நரகாசூரன் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆம், திரையரங்குகளில் வெளியிடுவதற்குப் பதிலாக, நேரடியாக OTT தளங்களில் வெளியிடலாமா? என்று கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

கார்த்திக் நரேனின் கேள்விக்கு டிஜிட்டல் பிளாட்பார்ம் என்று 85 சதவிகிதம் பேர் Yes என்று பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கருத்தைக் கேட்டு கார்த்திக் நரேனு நரகாசூரன் படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleமக்கள் வங்கி கடன் EMI செலுத்த வேண்டுமா? ஆர்பிஐ ஆலோசனை
Next articleநீர்க்குமிழி, தீ பிழம்புகளோடு வெளியான ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here