Kamali from Nadukkaveri Teaser; கமலி from நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் கமலி from நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கயல் ஆனந்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். கயல் படத்தின் மூலம் பிரபலமானார்.
சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ரூபாய், பண்டிகை, பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.
தற்போது டைட்டானிக், எங்கே அந்த வான், அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவண காண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜசேகர் துரைச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் கமலி From நடுக்காவேரி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கயல் ஆனந்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்திற்கு தீனதயாளன் இசையமைக்கிறார். சாய் சம்பத் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் கமலி என்ற கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கமலி from நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், கயல் ஆனந்தி ஒன்றுமே தெரியாத ஒரு வெள்ளந்தியாக நடித்துள்ளார். பள்ளி முதல் கல்லூரி வரை ஆனந்தி செய்யும் சேட்டைகள் அப்படி.
பள்ளியில் ஆசிரியர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பட்டாசுகளை வெடிக்கச் செய்கிறார். அதன் பிறகு பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். அங்கு தேர்வு எழுதுகிறார்.
ஒன்றுமே தெரியவில்லை. இப்படியெல்லாம், கிராமத்திலிருந்து செல்லும் பெண்கள் பள்ளி, கல்லூரியில் சந்திக்கும் இன்னல்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கயல் ஆனந்தியின் கதாபாத்திரம் தான் கமலி என்றும், அவரது ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு தாலுகா பகுதியின் நடுக்காவேரி. இந்த கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு படிக்க வருகிறார்.
கல்லூரியில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்திய படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.