Home சினிமா கோலிவுட் மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியை தொடங்கிய படக்குழு!

மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியை தொடங்கிய படக்குழு!

363
0
Master Post Production

மாஸ்டர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியை தொடங்கிய படக்குழு! நீண்ட நாட்களாக கொரொனாவால் நடைபெறாமல் இருந்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர்.

கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, நாசர், சஞ்சீவ், சந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வர இருந்தது. ஆனால், நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன. இதன் விளைவாக மாஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு படத்திற்கு பிறகு நடைபெறும் டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய படங்களின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். விரைவில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்பட்டு, மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleதடைகளை தாண்டி வெற்றி கொள்பவனே ஹீரோ! HeroOnSunTV
Next articleதமிழகத்தில் 639 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here