Moive Review Maari 2 – மாரி 2 திரைவிமர்சனம் | பாகம் மூணையும் நா பாக்கணும்!
2018-ல் இறுதியாக பார்த்த படம் மாரி-2. ரிவியூ பண்ணுன அத்தனை பேரும், படத்தைக் கழுவிக்கழுவி ஊற்றினர். அதனால இந்தப் படத்துக்கு போகவே கூடாதுன்னு முடிவு பண்ணினோம்.
ஆனா விதி வலியது. நேத்து புல்லா பவர்கட். இந்தப் படத்துல தனுஷ், சாய்பல்லவி லவ் சீன் நல்ல இருக்கும். அப்புடின்னு ‘புளு சட்ட‘ சொன்னத நம்பி போனோம்.
பவர்கட் வேற, வீட்டுல சும்மா இருந்து சாவுறதுக்கு பதிலா; மாரி 2 படம் பாத்துட்டே சாவலாம்னு போயிட்டோம்.
அங்க போன, நல்ல இருந்த பிரேமம் பொண்ண, பிச்சக்காரி பொண்ணா மாத்திட்டானுவ… டே…. தகப்பா இந்த லவ்வு தான் உனக்கு நல்லா இருக்கா..
இது உனக்கே நியாயமா.. உன்ன நம்பி போனதுக்கு எவ்ளோ சிறப்பா செய்ய முடியுமோ செஞ்சிட்ட (புளு சட்ட)…
அப்புறம், மண்ட நெறைய கொண்ட வச்சிட்டு ஒரு வில்லன், படத்துல அவா ஒருத்..தாள்.. தான்…. பாக்க அழகா இருந்தா…. அவாளையும்… இடைவேளைக்கு அப்புறம் மொட்டையடிச்சி விட்டுட்டா…
கனா படம், தோல்வியால் துவண்டவனுக்கு 10 யானை பலம் குடுக்கும்னு சொன்னோம். அதே மாரி, மாரி-2 படம் பாத்துட்டு உயிரோட வந்துட்டா; வாழ்கையில எவ்ளோ தோல்வி வந்தாலும் தாங்குற சக்தி கிடைச்சிடும்.
மாரி படம் எவாலெல்லாம் நல்லா இல்லன்னு சொன்னாளோ; அவா வாயால, நல்ல இருக்குனு சொல்ல வப்போமுனு, மாரி 2 எடுத்து வச்சிருக்கா…
மாரி-2 நல்ல இல்லன்னு சொன்னா… மாரி-3 எடுத்து அதவிட மாரி-2 எவ்வளவோ மேல்னு சொல்ல வச்சிடுவாபோல…
எப்பா தனுசு, மாரி பட வெற்றிகாக பாலாஜி மோகனுக்கு தங்க சங்கிலி பண்ணி போட்ட. மாரி 2-வுக்கு என்ன பிளாட்டினம் ஜெயினா…?
நீங்க கண்டிப்பா மாரி-3 எடுக்கணும். அதையும் நா பாக்கணும். அதுக்கு பின்ன, எவ்ளோ பெரிய மொக்கை படமா இருந்தாலும், அதப்பாக்குற சக்தி எனக்கு கிடைச்சிடும்.
மொத்தத்தில், 2018-ன் ***** மாரி படம்….