Vijay Sethupathi; 9 வருடங்களுக்குப் பிறகு வெளியான விஜய் சேதுபதியின் புகைப்படங்கள்! கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் பழைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறுகிய கால இடைவெளியில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் கொண்டவர். ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து அன்பு காட்டக்கூடியவர்.
ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். ரஜினியால் மகாநடிகன் என்றும் பாராட்டப்பட்டுள்ளார்.
இவரது நடிப்பில் வந்த நானும் ரௌடி தான், சேதுபதி, பேட்ட, சூப்பர் டீலகஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. தற்போது மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அண்மையில், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படம் வெளியானது. தற்போது கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், க/பெ.ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், புஷ்பா, லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதன் காரணமாக விஜய் சேதுபதி ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.