Home சினிமா கோலிவுட் காட்டுக்குள்ள விலங்குகளை படம் பிடிக்கும் மாளவிகா!

காட்டுக்குள்ள விலங்குகளை படம் பிடிக்கும் மாளவிகா!

292
0
Malavika Mohanan

Malavika Mohanan; காட்டுக்குள்ள ஆவணப்படம் எடுக்கும் மாளவிகா! மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் காட்டுக்குள்ள சென்று அங்குள்ள விலங்குகளைப் பற்றி ஆவணப்படம் எடுக்க இருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனன் விலங்குகளைப் பற்றி ஆவணப்படம் எடுக்க இருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், நாசர், பிரேம் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது, தனது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.

அந்த வகையில், தற்போது கையில் கேமரா வைத்துக்கொண்டு புகைப்படம் எடுப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஆவணப்படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மும்பையில் பிறந்து வளர்ந்தேன். மும்பை எப்போதும் பிஸியான சிட்டி. கடற்கரையிலும் கூட்டமாக இருக்கும். அமைதியாக இருக்காது. இயற்கையுடன் நெருக்கமாக இருக்கும் இடங்களில் நான் வாழ்ந்ததில்லை.

அதனால்தான் எனக்கு ஓய்வு நேரங்கள் கிடைக்கும் போதெல்லாம் சரணாலயங்களையும், காடுகளையும் பார்வையிட விரும்புகிறேன்.

அப்படி விரும்பி நான் சென்ற இடம் தான் வயநாடு. அங்குள்ள பகுதிகளை கண்டு பிரமித்துப் போனேன். அதன் பிறகு மசினகுடி, கபினி ஆகிய பகுதிகள் உள்பட பல வனவிலங்கு சரணாயலங்களுக்குச் சென்றேன்.

அப்போதுதான் இது போன்ற தருணங்களை ஏன் ஆவணப்படுத்தக்கூடாது என்று நினைத்தேன். கேமரா மூலமாக அந்த அழகான தருணங்களை படம் பிடித்தேன்.

எனக்கு சரியாக வரும் ஒரு வாரத்தை எடுத்துக் கொண்டு, வாடகைக்கு ஜீப் எடுத்து காட்டுக்குள்ள சென்று, சிறுத்தை மற்றும் பிற விலங்குகளை எனது கேமரா மூலமாக புகைப்படம் எடுக்க வேண்டும்.

இதன் மூலம் நான் மேலும் பலவற்றை செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleமிரட்டும் ஐஸ்வர்யா தத்தா: மிளிர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Next article‘நிஜத்திலும் நான் கர்பம்தான்’ சொன்னது யாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here