Home சினிமா கோலிவுட் மாஸ்டர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு!

மாஸ்டர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு!

423
1
Master Audio Launch

Master Audio Launch; மாஸ்டர் இசை வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் Vijay நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் Master படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் (Vijay)

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. மாஸ்டர் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலக முழுவதும் வைரலானது.

இதையடுத்து, கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதை காண்பதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர்.

நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய்யைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்தனர். அது அந்தப் பகுதியில் மட்டுமே உள்ள ரசிகர்கள்.

அவர்களை பார்த்து விஜய் கையெடுத்து கும்பிடுவதும், செல்ஃபி எடுத்துக் கொள்வதும் என்று அவரது புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch)

இந்த நிலையில், தற்போது மாஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டுவிட்டரில் #MasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டை சன் டிவி நிறுவனம் தங்களது சன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிறுவனம் மாஸ்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Master USA Premiere Show

இதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவில் மாஸ்டர் பிரிமியர் ஷோ (Master USA Premiere Show) நடக்க இருப்பதாக திங்க் பிக் பிக்சர்ஸ்வ் நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திங்க் பிக் பிக்சரஸ் நிறுவனம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளது.

இந்திய திரைப்படங்களை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள திங்க் பிக் நிறுவனம் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது.

இதனால் படம் எப்படி இருக்கிறது என்ற தகவல் டுவிட்டரில் ஒரு நாள் முன்னதாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் அப்டேட் (Master Update)

தற்போது மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக், மாஸ்டர் இசை வெளியீடு என்று மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleSA vs AUS Updates; ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்த தென் ஆப்பிரிக்கா அணி
Next articleபாரத் பெட்ரோலிய நிறுவனம் விற்க காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here