Home சினிமா கோலிவுட் 2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!

2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!

898
0
Master Most Awaited Film in 2020

2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!

அஜித், ரஜினி படங்களை தோற்கடித்து 2020ல் சிறந்த படம் எதுவாக இருக்கும்? 2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படமாக விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் அமைந்துள்ளது.

யாஷின் கேஜிஎஃப் 2, அஜித்தின் வலிமை, ரஜினிகாந்தின் அண்ணாத்த, பிரபாஸின் ஜான், மோகன்லாலின் மரைக்காயர் ஆகிய படங்களை தோற்கடித்து 2020 ஆம் ஆண்டின் சிறந்த படமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட படங்களில் அதிகம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட முதல் படம் மாஸ்டர். இந்த ஆண்டில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் எது என்பது குறித்து தனியார் ஆங்கியல பத்திரிக்கை ஒன்று ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் 1000 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாக்கெடுப்பு முடிந்த தற்போது கருத்துக்கணிப்பு ரிசல்டை தனியார் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் நம்பர் 1

விஜய்யின் மாஸ்டர் படம் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் படம் மாஸ்டர். தொடக்கம் முதல் நம்பர் 1 இடம் பிடித்த மாஸ்டர் 45.61 சதவிகிதம் வரை ஓட்டுகளை பெற்று நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

கேஜிஎஃப் 2

யாஷ் நடிப்பில் உருவாக்கப்பட்ட கன்னட படம் கேஜிஎஃப்2. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. 33.83 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் மாஸ்டர் படத்தின் வெற்றியை முறியடிக்காது.

வலிமை

எதிர்பாராத விதமாக அஜித் நடிப்பில் உருவாக்கப்பட்ட வலிமை படத்திற்கு ரசிகர்களிடையே போதுமான அளவில் வாக்கு சதவிகிதம் கிடைக்கவில்லை. வெறும், 15.68 சதவிகிதம் மட்டுமே வாக்கு சதவிகிதம் பெற்று 3 ஆவது இடம் பிடித்துள்ளது.

அடுத்து சொல்லவே வேணாம். ரஜினியின் அண்ணாத்த, பிரபாஸின் ஜான், மோகன் லாலின் மரைக்காயர் ஆகிய படங்கள்தான். இந்த படங்களுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.

Master Vote

அண்ணாத்த படத்திற்கு 2.58 சதவிகிதம், ஜான் 1.32 சதவிகிதம், மோகன்லால் 0.98 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் மாஸ்டர், கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களும் இடம்பெற்றுள்ளன.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், படக்குழுவினர் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதே போன்று யாஷின் கேஜிஎஃப் 2 படம் தசாரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
Next articleஅழகான குட்டி தேவதை: சந்தோஷத்தில் ராஜா ராணி ஜோடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here