Master Kutti Story Lyric; லைக்ஸ் அள்ளிய தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி! மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.
தளபதி விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.
பிகில் படத்திற்குப் பிறகு விஜய் நடித்துள்ள புதிய படம் மாஸ்டர். பொதுவாக விஜய் படம் என்றால் ரிலீஸ் ஆகும் போதுதான் பிரச்சனையில் சிக்கும்.
ஆனால், இங்கு படப்பிடிப்பின் போதே பல பிரச்சனைகளை சந்தித்தது மாஸ்டர். அதையும் தாண்டி ரசிகர்களின் பேராதரவுடன் திரைக்கு வர தயாராகியுள்ளது.
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா காரணமாக மாஸ்டர் ரிலிஸ் தேதி குறித்து அறிவிப்பு வரவில்லை.
எனினும் மே 1 ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என்று புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் மட்டும் 1.6 மில்லியன் லைக்ஸ் அள்ளியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ யூடியூப்பில் 43 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. அதோடு ஒரு லட்சம் டிஸ்லைக்குகளையும் குட்டி ஸ்டோரி பாடல் லிரிக் வீடியோ பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் ஏற்கனவே 8 பாடல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இவ்வளவு ஏன், வாத்தி கம்மிங் பாடல், சினிமா பிரபலங்களிடையே டான்ஸ் சேலஞ்ச்சையே உருவாக்கியுள்ளது. ஒவ்வொருவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் சேலஞ்ச் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.