Home சினிமா கோலிவுட் ஏமாந்த விஜய் ரசிகர்கள்: மாஸ்டர் டிரைலர் எப்போது ரிலீஸ்?

ஏமாந்த விஜய் ரசிகர்கள்: மாஸ்டர் டிரைலர் எப்போது ரிலீஸ்?

736
0
Master Trailer Release Date

Master Trailer; முதல் முறையாக ஏமாந்த விஜய் ரசிகர்கள்: மாஸ்டர் டிரைலர் எப்போது ரிலீஸ்? மாஸ்டர் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் டிரைலர் (Master Trailer) அறிவித்தபடி இன்று மாலை வெளியாகவில்லை.

மாஸ்டர் டிரைலர் வெளியாகததால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தணு, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதையடுத்து, மாஸ்டர் டிரைலர் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அறிவித்தபடி இன்று வெளியாகும் கொண்டாடலாம் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், மாஸ்டர் டிரைலர் வெளியாகவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் முதல் முறையாக ஏமாற்றமடைந்தனர்.

ஆம், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான போதிலும் மாஸ்டர் டிரைலர் வெளியாகாதது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பயனாக ஜந்தா கர்பியூ எனப்படும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாஸ்டர் டிரைலர் திட்டமிட்டுள்ளபடி இன்று வெளியாகவில்லை. எனினும், வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் திட்டமிட்டுள்ளபடி வெளியாகுமா என்பது கேள்விக்குறிதான்.

SOURCER SIVAKUMAR
Previous articleVisu: சம்சாரம் அது மின்சாரம் புகழ் விசு காலமானார்!
Next articleபிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த விசுவின் உயிர் பிரிந்தது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here