Home சினிமா கோலிவுட் ஆனா ஆவனா வாத்தி ரெய்டுனா லிரிக் வெளியீடு!

ஆனா ஆவனா வாத்தி ரெய்டுனா லிரிக் வெளியீடு!

589
0
Master Vaathi Raid Lyric

Master Vaathi Raid Lyric; மாஸ்டர் மூன்றாவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு ஒத்து பாடல் வெளியாகியுள்ளது.

வாத்தி ரெய்டு (Vaathi Raid Lyric) பாடல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள இந்தப் படம் கல்விமுறையில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நீட் தேர்வை எதிர்த்து போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின்வின் காட்சியும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி (Kytty Story Lyric) மற்றும் வாத்தி கம்மிங் (Vaathi Coming Lyric) பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு (Vaathi Raid Lyric) பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆனா ஆவனா

அப்னா டைம்னா

வாங்கன்னா வணக்கம்னா

வாத்தி ரெய்டு னா

என்று தொடங்கும் வாத்தி ரெய்டு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, பாடலுக்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

வாத்தி ரெய்டு பாடலுக்கு அறிவு பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார். அவருடன் இணைந்து அனிருத்தும் பாடியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. சன் தொலைக்காட்சி தங்களது சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleநான் பிழைப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை; கொரோனா நபரின் கண்ணீர் கதை
Next articleஆசிரியரை அசிங்கப்படுத்த ஆட்டோம்பாம் வருது: கமலி from நடுக்காவேரி டீசர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here