மோடிக்குப் போட்டியாக மேலுமொரு டீக்கடைக்காரர்: என்ற பகவதியம்மே!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி மோகனா. இருவரும் இணைந்து கொச்சியில், டீக்கடை நடத்தி வருகின்றனர்.
இதுவரை இருவரும், 12 வருடத்தில் 23 உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 69 வயதான விஜயன், சிறு வயது முதலே உலகைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.
டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டே மனைவியுடன் இதுவரை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
இதுவரை அமெரிக்கா, பெரு, அர்ஜெண்டினா, பிரேசில் என பல நாடுகளுக்குச் சென்றுவிட்டார். ஸ்வீடன், டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்காக கணவனும், மனைவியும் மீண்டும் உழைக்கத்துவங்கி விட்டனர். டீக்கடையில் வேலையாட்கள் யாரும் இல்லை. இவர்களே எல்லாம்.
பயணம் மேற்கொள்ள போதிய பணமில்லை எனில் வங்கியில் கடன்பெற்று வெளிநாடு செல்வார்களாம். திரும்பி வந்தபின் வேலை செய்து கடனை அடைக்கின்றனர்.
டீக்கடை முழுவதும் வெளிநாடுகளில் எடுத்தக்கொண்ட புகைப்படங்களை மாட்டிவைத்து கடைக்கு வருபவர்களை வியக்க வைக்கின்றனர்.
இந்தியப் பிரதமர் மோடியும் டீ விற்று, முதலமைச்சராகி பின்பு பிரதமராகி இன்று உலக நாடுகளைச் சுற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
என்ற பகவதியம்மே இன்னிக்கே ஒரு டீக்கடை வைக்கணும்.