ஸ்ரீதேவி பங்களா: தெறித்து ஓடிய ஜான்வியும், மேனேஜரும்! (வீடியோ)
மலையாள கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியார் நடித்த புதிய படத்தின் ட்ரைலர் பொங்கல் அன்று வெளியானது.
அப்படத்தின் பெயரே ஸ்ரீதேவி பங்களா. படத்தில் ஸ்ரீதேவி என்ற பெயரில் நடித்துள்ளார். மை, மையில் என ஒரு குழந்தையிடம் சொல்கிறார்.
மது அருந்திவிட்டு அரை நிர்வாணமாக குளியலறையில் அழுவது போன்றும், இறந்து கிடப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
போனி கபூர் அதிர்ச்சி
இந்த வீடியோவைப் பார்த்ததும் போனி கபூர் அதிர்ச்சியடைந்து விட்டார். ஸ்ரீதேவி பங்களா இயக்குனர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அப்படத்தை வெளியாகவிடாமல் தடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை படத்தின் இயக்குனர், இது ஸ்ரீதேவின் கதையல்ல. கற்பனை கதையே. படத்தில் ஸ்ரீதேவி என்ற கதாப்பாத்திரம் மட்டுமே உள்ளது. இது ஸ்ரீதேவி பற்றிய கதையல்ல எனத் தெரிவித்துள்ளார்.
லைன்ஸ் கோல்டன் அவார்ட்
இந்நிலையில், மும்பையில் லைன்ஸ் கோல்டன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கலந்துகொண்டார்.
அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதில் ஒருவர் ஸ்ரீதேவி பங்களாவைப் பற்றிக் கேள்விகேட்டார்.
ஜான்வி உடனே அதிர்ச்சியடைந்துவிட்டார். கேள்வி கேட்டவுடன் மேனேஜர் குறுக்கிட்டு இப்படி கேள்வி கேட்க வேண்டாம் எனக் கூறினார்.
அடுத்த நொடியே மேனேஜரும், ஜான்வி கபூரும் அங்கிருந்து தெறித்து ஓடினர்.