Home சினிமா கோலிவுட் விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை: பிரபல நடிகை ஓபன் டாக்!

விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை: பிரபல நடிகை ஓபன் டாக்!

979
0
Vijay

Natasha Singh Marriage; விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசை பிரபல நடிகை ஓபன் டாக்! நடிகர் விஜய்யை திருமணம் செய்து ஆசைப்படுவதாக நடிகை நடாஷா சிங் தெரிவித்துள்ளார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் வந்த 3 ஆவது படம் ஜிப்ஸி.

அரசியல், காதல் கதைகளை மையப்படுத்திய இந்தப் படத்தில், ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்மையில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்கபட்டது. நீங்கள் யாரை கொலை செய்ய விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜீவா என்று யோசிக்காமல் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து யாருடன் சேர்ந்து டேட்டிங் செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக் கொண்டே தனுஷ் என்று பதிலளித்துள்ளார்.

இறுதியாக, நீங்கள், யாரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்கவே, அதற்கு தளபதி விஜய் தான் என்று பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், ஜிப்ஸி படமும் திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு வரும் 31 ஆம் தேதிக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கிறது. அப்போது, ஜிப்ஸி படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleசரியான நேரத்தில் சரியான வீடியோ வெளியிட்ட சுஹாஷினி!
Next articleகொரோனா வளர்ப்பு பிராணிகள் மூலம் பரவுமா? பிரபலங்கள் கூறுவது என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here