Home சினிமா கோலிவுட் நெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா பதில் தனுஷ்-கீர்த்திசுரேஷ்

நெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா பதில் தனுஷ்-கீர்த்திசுரேஷ்

457
0
ரஜினி-மேனகா மூன்று ஹீரோயின்கள்

நெற்றிக்கண் 2: ரஜினி-மேனகா வேடத்தில் தனுஷ்-கீர்த்திசுரேஷ் நடிக்க உள்ளார்களாம். மேலும் இதில் மூன்று ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண்

S P முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடமிட்டு அப்பா மகனாக நடித்து 1981 வெளிவந்த “நெற்றிக்கண்” திரைப்படம் மெகா ஹிட் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

நெற்றிக்கண் 2

இந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் போட்டி தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

போட்டிகள் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் முழு உரிமையை யார் தக்க வைத்துக்கொள்வார் என்று கேட்டால் மறு பேச்சுக்கே இடமில்லாமல் நடிகர் தனுஷ் என்று பிசுறு இல்லாமல் கூறிவிடலாம்.

மூன்று ஹீரோயின்கள்

நெற்றிக்கண் 2 தனுஷ்-கீர்த்திசுரேஷ்அதே போல கதாநாயகி யார் என்று யோசிக்க கூட வேண்டாம். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தான்.

ரஜினி-மேனகா மட்டும் இல்லாமல் சரிதா லெட்சுமி என மொத்தம் மூன்று கதாநாயகிகள் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருப்பார்கள். எனவே இதிலும் மூன்று ஹீரோயின்கள் நிச்சயம் இடம் பெறுவார்கள்.

வெற்றிவாகை சூடும் தனுஷ்

தனுஷ் படங்கள் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அசுரன் திரைப்படம் நூறு நாட்களை கடந்து திரை அரங்குகளை நிரப்பிக்கொண்டு இருந்தன.

தனுஷ் தேர்தெடுக்கும் கதைகள் ஒருபுறம் தனுஷ் நடிப்பு மறுபுறம் அவரது உழைப்பு என அனைத்தும் பாராட்டுக்கு உரியதே.

தனுஷ்-கீர்த்திசுரேஷ் நடிப்பில் தொடரி படம் சரியாக வெற்றிபெறவில்லை. நெற்றிக்கண் திரைப்படம் இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையலாம்.

இந்த திரைப்படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleதலைவலி ஏன் உண்டாகிறது? ஜில்லுன்னு சாப்பிட்டால்!
Next articleகரும்பு தின்றவுடன் தண்ணீர் குடிக்க கூடாது ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here