Home சினிமா கோலிவுட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏன் இவ்வளவு மவுசு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏன் இவ்வளவு மவுசு

0
1994

ஸ்டார் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பத்து வருடத்திற்கு முன்பு சீரியல்களைப் பற்றி கேட்டால் சன்டிவி மட்டும் தான் சொல்வார்கள்.

ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களும் அதிக சீரியலை ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.

தற்போது வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மட்டுமில்லாமல் வேலைக்குப் போகும் இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பார்க்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்.

அப்படி அந்த சீரியல்ல என்னதான் இருக்கு?

வீடு, வீடு விட்டா கடை.

கடை, கடை விட்டா வீடு,

இப்படி இந்த இரண்டு இடத்தை தவிர என்றாவது ஒருநாள் தான் வேறு இடங்களில் இந்த சீரியலில் நடக்கும் காட்சிகளை பார்க்கலாம்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், சித்ரா, சாந்தி வில்லியம்ஸ், சரவன விக்ரம், கவிதா கவுடா நடித்து வருகிறார்கள்.

இவர்களது பெயரை இப்படி சொன்னால் மக்களுக்கு உடனே ஞாபகம் வராது.

மூர்த்தி, தனம், ஜீவா, கதிர், கண்ணன், முல்லை, மீனா இந்த பெயர்களைச் சொன்னால் உடனே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஞாபகத்துக்கு வரும்.

அண்ணன் தம்பி நான்கு பேர். இதில் முதல் மூன்று நபர்கள் தாங்கள் சொந்தமாக வைத்துள்ள பாண்டியன் ஸ்டோர் எனும் கடையை பார்த்துக் கொள்கிறார்கள்.

கடைக்குட்டி கண்ணன் காலேஜுக்கு செல்கிறார்.
மூர்த்தி மனைவியாக தனம் மற்றும் மூர்த்தியின் மூன்று தம்பிகளுக்கும் அண்ணியாக இல்லாமல் அம்மாவாக வருகிறார்.

அவர்களுக்காக இவர்கள் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே வாழ்கிறார்கள்.

பிறகு ஜீவா, மீனாவை திருமணம் செய்து கொள்ள, கதிர் முள்ளையை திருமணம் செய்து கொள்கிறார்.

ஒரே வீட்டில் 3 மருமகளுடன் நடக்கும் சந்தோஷங்கள், கஷ்டங்கள், சண்டைகள் போன்றவற்றை முழுமையாக காட்டுகிறது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் வரும் சண்டைகள் முக்கால்வாசி கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணா என்பவரால் தான்.

ஜீவாவின் மனைவி மீனா இந்த குடும்பத்தை விட்டு தன் கணவனை தனிக்குடித்தனம் அழைத்துச் செல்ல நினைப்பதால் வரும் சிக்கல்கள் இந்த தொடர் ஆரம்பம் ஆனதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்பது கதிர் முல்லையின் காதல் காட்சிகளையும், செல்லமாக போடும் சண்டைக் காட்சிகளில் தான்.

இவர்கள் தான் இந்த தொடர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக முக்கிய காரணமாகிறார்கள்.

ஜீவா, மீனா பாதி நாட்களில் சண்டைகள் ஆகவும், கதிர் முல்லை பாதி நாட்கள் காதல் காட்சிகளிலும் இந்தத் தொடர் நகர்கிறது.

முல்லைக்கு அம்மாவாக வரும் சாந்தி வில்லியம்ஸ், அவரது அக்கா மகள் இருவரும் சேர்ந்து இந்த குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பது எண்ணம்.

மீனாவின் தந்தைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த குடும்பத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்பது எண்ணம்.

இந்த தடைகளை தாண்டி பல சோதனைகளைத் தாண்டி அண்ணன் தம்பிகள் நால்வரும் எந்த பிரச்சனையிலும் பிரியாமல் ஒற்றுமையாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது இந்த தொடர்.

இதில் மூத்த அண்ணனாக வரும் மூர்த்தி என்கிற ஸ்டாலின் அதில் நடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக மூத்த அண்ணன் தன் குடும்பத்தை எப்படி சுமக்கிறான் என்பதை இந்த தொடரில் அழகாக காட்டுகிறார் டைரக்டர் சிவசங்கர்.

ஒரே வீட்டில் தினமும் கதைகள் நகர்கிறது அந்த கதையை அழகாக நகர்த்த கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் பிரியா தம்பி என்பவர்.

இந்த தொடரில் எத்தனை சண்டைகள் வந்தாலும் பிறகு ஒன்றுகூடி அமர்ந்து சாப்பிடுவது பார்க்கும் பொழுது நம்முடைய பழைய வாழ்க்கைகள் நினைவுக்கு வந்து போகிறது.

அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகள், தம்பிகளை பிரிய மனம் வராத அண்ணன், நான்கு பேரையும் ஒன்றாக காத்துவரும் அண்ணி என பல நேரங்களில் இந்த தொடர் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

சன் டிவி நாயகி, ரோஜா, கல்யாண வீடு, அழகு போன்ற சீரியல்கள் யூட்யூபில் சராசரி 10 -15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தினமும் பார்க்கிறார்கள்.

ஆனால் விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வை மட்டுமே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ விற்கு இவ்வளவு மவுஸ் என்றாள் இந்த தொடருக்கு எவ்வளவு இன்று நாம் சொல்லியாக வேண்டும்.

வீட்டில் உள்ளவர்கள் இரவு 8 மணி வரை காத்திருந்து பார்ப்பார்கள். ஆனால் இளைஞர்கள் அப்படியா ஹாட்ஸ்டார் டவுன்லோட் செய்து மாத சந்தா கட்டி காலை 8 மணிக்கே பார்த்து விடுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர் வீட்டை தாங்கிப் பிடிப்பது அண்ணி தனம் மட்டுமில்லை, அந்த வீட்டில் உள்ள அனைவரின் குணம் என்று கூட சொல்லலாம்.

அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் வாழ இது ஒரு எடுத்துக்காட்டான தொடர் என்று கூட சொல்லலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here