பரியேறும் பெருமாள் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில், பல இடங்களில் இப்படம் வெளியாகவில்லை. நம் இணையத்தில் கூட இன்னும் இப்படத்தின் விமர்சனத்தை பதிவு செய்ய முடியவில்லை.
பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் பரியேறும் பெருமாள். இப்படம், செக்கச்சிவந்த வானம் திரைப்படத்துடன் இந்த வாரம் வெளியானது.
குறைந்த திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வெளியிடப்பட்டது. காரணம், ஏற்கனவே வந்த படங்கள் மற்றும் செக்கச்சிவந்த வானம் படமும் நிறைய திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
ஆனால், விமர்சகர்கள் அனைவரும் இப்படத்தை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர். இதனால் இப்படத்தை திரையரங்குகளில் காண பெரும்பாலன மக்கள் விரும்புகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள தமிழர்கள், இப்படத்தை பைரசி இணையதளங்களில் பார்த்துள்ளனர். படம் மிக அருமையாக உள்ளதால், மனம் கேட்காமல் படக்குழுவிற்கு உதவ முன்வந்துள்ளனர்.
உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண்ணை அனுப்புங்கள். டிக்கெட் கட்டணத்தை இங்குள்ள மக்கள் தர தயாராக உள்ளோம் என படக்குழுவினருக்கு ட்வீட் செய்துள்ளனர்.
சிறந்த படங்கள் வரும்பொழுது மக்கள் அதை வரவேற்கத் தயங்குவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். இதுபோன்ற சிறந்த திரைப்படங்கள் வெளிவந்தால், மக்கள் பைரசி இணையதளங்களையே மறந்துவிடுவார்கள்.
மொக்கை படங்களுக்கு அதிக விலையில் கட்டணம் நிர்ணயிப்பதால், சிறிய படங்களையும், தரமான படங்களையும் சேர்த்து பாதிப்பது வேதனையான விஷயம்.
அடுத்த வாரம் ‘நோட்டா’ மற்றும் ’96’ படங்கள் வெளியாக உள்ளன. எனவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் திரையரங்கை உயர்த்துவது கடினமே.