Home விளையாட்டு பார்திவ் படேல்; 9 விரலில் தான் கீப்பிங் செய்தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

பார்திவ் படேல்; 9 விரலில் தான் கீப்பிங் செய்தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

226
0
பார்திவ் படேல்

பார்திவ் படேல்; 9 விரலில் தான் கீப்பிங் செய்தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியா அணிக்காக 9 விரலில் தான் விக்கெட் கீப்பிங் செய்தேன் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்துள்ள பார்திவ் படேல், இந்தியாவின் முன்னாள் கேப்டன் கீப்பர் எம்‌எஸ் தோனிக்கு முன் இருந்தே விளையாடி வருகிறார்.

போதிய வாய்ப்பு கிடைக்காததால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவருக்கென ஒரு பெயரை சம்பாரித்து வைத்துள்ளார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் 35. கடந்த 2002ல் அறிமுகம் ஆன இவர், 25 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்.

மற்றபடி உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் இவர் 193 முதல் தர போட்டிகளில் (486 ‘கேட்ச்’, 77 ‘ஸ்டம்பிங்’) பங்கேற்றார். இவரது தலைமையில் குஜராத் அணி 2016-17ல் ரஞ்சி கோப்பை வென்றது.

அவரின் விரல் குறித்து பார்திவ் படேல் கூறுகையில், சிறு வயதில் கதவு இடுக்கில் சுண்டி விரல் சிக்கி துண்டாகி விட்டதாகவும் அது தன்னுடைய கீப்பிங் பணியை பெறிதளவு பாதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கிளவுசில் சிறியதாக உள்ள சுண்டு விரல் உள்ளே நுழையாது. இதனால் ‘டேப்’ வைத்து கடைசி விரலில் நன்றாக ஒட்டிக் கொள்வேன் எனவும் கூறினார்.

10 விரல்களுடன் இருந்திருந்தால் எப்படி கீப்பிங் செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் 9 விரல்களுடன் இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடியது பெருமையாக உள்ளது.

Previous articleசெவ்வாய் கிரகம் செல்ல வைக்கும் ‘பாங்கு பானம்’ லிட்டர் ரூ.300 விற்பனை செய்த இளைஞர்கள் கைது
Next articleபினராயி விஜயன் பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கணித்தது ஏன்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here