சர்தார் வல்லபாய் படேல் சிலை, உலகின் மிகப்பெரிய சிலையாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்கின்றார்.
சர்தார் வல்லபாய் படேல் சிலை, குஜராத்தின் நர்மதா அணை அருகே, 182 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட உள்ளது. இதனை 2000 கோடி செலவில் உருவாக்கியுள்ளனர். இதுவே இனி உலகின் மிக உயரமான சிலை.
இதுவரை சீனாவின் புத்தர் சிலையே, உலகின் உயரமான சிலையாக இருந்தது. 128 மீட்டர் சிலையின் உயரம் மட்டும்.
படேல் சிலை இந்தியாவில் உருவாகியது. ஆனால், இந்தியர்கள் உருவாக்கவில்லை. இந்த சிலையை உருவாக்கும் பணியில் 700க்கு மேற்பட்ட சீனர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘மேக் இன் இந்தியா’ திட்டம் கொண்டுவந்த பாஜக அரசே, வெளிநாட்டினரை வைத்து சிலைகளை உருவாக்கியுள்ளது. இந்த சிலை இந்தியாவில் உருவாகியிருந்தாலும், பெரும் பங்கு சீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிலை வடிப்பாளர் ராம் வி.சுந்தர், படேலின் சிலையின் அச்சு மாதிரிகளை மட்டுமே உருவாக்கி கொடுத்துள்ளார். சிலையை சீன தொழில்நுட்பங் கொண்டே உருவாக்கியுள்ளனர்.
சீனர்களை பயன்படுத்தியதால், இந்திய கட்டிடக் கலைஞர்களின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. படேல் சிலையால் இந்திய கட்டிடக்கலைஞர்களுக்கு எந்த பெருமையும் இல்லை.
மேலும், மகாராஸ்டிரா பாஜக அரசு 4000 கோடி செலவில், 212 மீட்டர் உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை, அரபிக்கடலில் நிறுவ உள்ளது. இது சீனாவின் புத்தர் சிலை மற்றும் பீடத்தை விட உயரமானது. 208 மீட்டர்.
இதன்மூலம், இந்தியா உயரமான சிலைகளை கொண்ட நாடாகும். இந்த சாதனை எத்தனை வருடம் நிலைக்கும்? நேற்று சீனா. இன்று இந்தியா. நாளை வேறு ஒரு நாடு.
இந்தியாவின் பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ள நிலையில், இவ்வளவு பொருட்செலவில் இரண்டு சிலைகள் தேவைதானா?