Home சினிமா கோலிவுட் Pooja Hegde: மீண்டும் தமிழுக்கு வரும் பூஜா ஹெக்டே!

Pooja Hegde: மீண்டும் தமிழுக்கு வரும் பூஜா ஹெக்டே!

286
0
Pooja Hegde Tamil Films

Pooja Hegde முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஹிந்தி நடிகை பூஜா ஹெக்டே விரைவில் தமிழ் சினிமாவிற்கு வர இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே இந்தி நடிகை. இவர், கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து, இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை மிஷ்கின் கொடுத்தார்.

ஆம், கடந்த 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன் நடிப்பில் வந்த முகமூடி என்ற படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார் Pooja Hegde. இப்படத்திற்கு அந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிக கவனம் செலுத்தினார். அண்மையில், இவரது தெலுங்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எனினும், தமிழில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இதில் மெய்சிலிர்த்த பூஜா ஹெக்டே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை பார்த்து வருகிறேன்.

இது எனக்கு ஆச்சரியமாகவும், மனதை தொடும் வகையில் வியப்பாகவும் இருக்கிறது. தமிழ் படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

அதற்காகத்தான் இவ்வளவு காலதாமதம் ஆகிவிட்டது. விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் அமைய மிஸ்டர் புயல்.காம் இணையதளம் மூலம் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

SOURCER SIVAKUMAR
Previous articleAustralian Associated Press; 85 வயது செய்தி நிறுவனம் மூடப்பட்டது
Next articleமகளிர் உலககோப்பை 2020: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா அணி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here