Home Latest News Tamil இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபு தேவா பர்த்டே டுடே!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபு தேவா பர்த்டே டுடே!

255
0

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா பர்த்டே டுடே! நடிகர், பிரபு தேவா இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபு தேவா இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகர் பிரபு தேவா. இவரது தந்தை சுந்தரம் ஒரு நடன இயக்குநர்.

தமிழ் சினிமாவில் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கின்றனர்.

நடிகர், இயக்குநர், நடன இயக்குனர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

மின்சார கனவு – தேசிய விருது

மின்சார கனவு படத்தின் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபு தேவா சிறந்த நடன இயக்குநருக்கான இந்திய தேசிய விருது பெற்றார்.

பிரபு தேவா திரைப்பயணம்

கடந்த 1988 ஆம் ஆண்டு வந்த அக்னி நட்சத்திரம் படத்தில் குரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் குரூப் டான்ஸராக இருந்த பிரபு தேவா, சூரியன் படத்தில் வரும் லாலக்கு டோல் டப்பிமா என்ற பாடலுக்கு முதன்மை ரோலில் டான்ஸ் ஆடி ரசிகர்களின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றார்.

சூரியன் படத்தைத் தொடர்ந்து பிரதாப், ரக்சனா, ஜென்டில்மேன், வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்களுக்கு முதன்மை ரோலில் டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்து படம் – ஹீரோ

இந்த நிலையில், ரோஜா நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்து படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

தொடர்ந்து காதலன், ராசய்யா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், லவ் ஸ்டோரி, காதலா காதலா, நினைவிருக்கும் வரை, சுயம்வரம், வானத்தைப் போல, ஏழையின் சிரிப்பில், பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்

ஹிந்தில் வெளியான ஏபிசிடி படத்தில், இவரது நடிப்பு மற்றும் டான்ஸைப் பார்த்த நடிகர் வருண் தவான், இவரை டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் என்று பாராட்டியுள்ளார்.

பிரபு தேவா திருமணம்

பிரபு தேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு, 3 குழந்தைகள். ஆனால், 2008 ஆம் ஆண்டில் மூத்த ஆண் குழந்தை புற்றுநோய் காரணமாக இறந்து போனது.

இதையடுத்து, இருவருக்கும் இடையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

பிரபு தேவா – நயன்தாரா காதல்

இந்த நிலையில், பிரபு தேவாவிற்கும், நயன்தாராவிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதகாவும் கூறப்பட்டது.

இருவருமே நெருங்கி பழகினர். இந்த நிலையில், பிரபு தேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார்.

பிரபு தேவா – நயன்தாரா காதல் முறிவு

ராம்லாத்திற்கு ஆதரவாக பல பெண்கள் அமைப்புகள் குரல் கொடுக்கவே, 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா, தாம் பிரபு தேவாவிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

பிரபு தேவா தற்போதைய படங்கள்

கடந்த 2003 ஆம் ஆண்டு கடைசியாக எங்கள் அண்ணா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 13 வருடங்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவில் களமிறங்கினார்.

தமன்னா உடன் இணைந்து த்ரில்லர் படமான தேவி படத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து வரிசையாக படங்களில் பிஸியாக இருக்கிறார்.

களவாடிய பொழுதுகள், குலேபகாவலி, மெர்குறி, லக்‌ஷ்மி, சார்லி சாப்ளின் 2, தேவி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பொன் மாணிக்கவேல் படத்தின் மூலம் முதன் முறையாக போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. மேலும், தேள், ஊமை விழிகள், பஹதீரா ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இயக்குநர்

தமிழில் விஷால் நடிப்பில் வந்த வெடி மற்றும் எங்கேயும் காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களையும் இயக்கியுள்ளார்.

பிரபு தேவா பிறந்தநாள்

இந்த நிலையில், பிரபு தேவா இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என்றும் பலரும் வாழத்து தெரிவித்து வருகின்றனர். மிஸ்டர் புயல் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.

ஹேப்பி பர்த்டே பிரபு தேவா சார்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here